Sportsகொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி - IPL 2024

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக, ஃபில் சால்ட் 75 ஓட்டங்களையும், சுனில் நரைன் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணி சார்பில் அதிகபடியாக,ஜோனி பேர்ஸ்டோ 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

T20 போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்கள் அடிக்கப்பட்ட போட்டியாக இன்றைய போட்டி பதிவானது.

இன்றைய போட்டியில் மொத்தமாக 42 ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...