Sportsஐதராபாத்தை வீழ்த்தி 78 ஓட்டங்களால் வென்ற சென்னை - IPL 2024

ஐதராபாத்தை வீழ்த்தி 78 ஓட்டங்களால் வென்ற சென்னை – IPL 2024

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாட தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்ப வீரரான ரஹானே 9 ஓட்டங்களுடன் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.

டேரில் மிட்செல் மற்றும் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

நன்றி தமிழன்

Latest news

காட்டுத்தீ வலயங்களில் இருந்து இதுவரை வெளியேறாத விக்டோரியர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ அபாயம் காரணமாக மேற்கு விக்டோரியா பகுதியில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை மக்கள் அபாய வலயங்களை...

அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் தற்காலிக விசா குடியேற்றப் பெண்கள்

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலிய பணியிடங்களுக்கு வரும் புலம்பெயர்ந்த பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து NSW யூனியன்ஸ் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. தாற்காலிக விசா பெற்ற 3000...

தெற்காசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலியாவிடம் இருந்து ஒரு புதிய விசா வகை

இந்தியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள், திறமையான ஆரம்ப-தொழில் வல்லுநர்களுக்கான மொபிலிட்டி ஏற்பாட்டின் கீழ், ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வசிக்கவும், பணியாற்றவும் புதிய வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கான...

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை நோயாளிகள் தொடர்பில் வெளியான ஆய்வு

நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. World of Statistics இணையதளம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.உலக மக்கள் தொகையில்...

விக்டோரியா மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும்...

உலகின் மிக அற்புதமான நகரங்களில் மெல்போர்ன் முதலிடம்

உலகின் சிலிர்ப்பை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பெயரிடப்பட்டுள்ளது. டைம் அவுட் சாகரவா இது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது...