Newsஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு கடல் கண்காணிப்பு விமானம்!

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு கடல் கண்காணிப்பு விமானம்!

-

இலங்கை உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்காக விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் மிட்செல் சான் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் முதல் கட்டமாக இந்த விமானம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 65,610 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை விட 23 மடங்கு பெரிய இந்தியப் பெருங்கடலில் இலங்கை ஒரு பிரத்யேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் Qantas-ஐ வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்த Virgin

ஜனவரி மாதத்தில் தாமதமின்றி விமானங்களை இயக்குவதற்கான சிறந்த விமான நிறுவனமாக Virgin Australia தேர்வு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பொருளாதார பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்...

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

மெல்பேர்ணின் வடக்கு பகுதியில் காட்டுத்தீ பரவல்

மெல்பேர்ணின் வடக்கே தொடர்ந்து நிலவும் அதிக வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக காட்டுத்தீ பரவியுள்ளது. டோனிபுரூக் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படை...

மெல்பேர்ண் பள்ளியில் நிர்வாண புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பாக மாணவர் ஒருவர் கைது

மெல்பேர்ணல் உள்ள கிளாட்ஸ்டோன் பார்க் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 20 மாணவிகளின் போலி நிர்வாணப் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டது தொடர்பாக 16 வயது மாணவர் ஒருவர்...