Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா – IPL 2024

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி டெல்லி அணிக்கு ஆரம்ப வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அணித் தலைவர் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ஓட்டங்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை சேர்த்தது.

154 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர். இருவரும் முறையே 68 மற்றும் 15 ஓட்டங்களை குவித்தனர். அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 33 மற்றும் 26 ஓட்டங்களை குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், வில்லியம்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

நன்றி தமிழன்

Latest news

தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் Hon Michelle Rowland MP

விக்டோரியா காவல்துறையினரிடம் சம்பளம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள்

விக்டோரியா மாநில போலீஸ் சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினை இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கவலையை விக்டோரியா காவல்துறை...

பாகிஸ்தான் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தின் வாயுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரின் சஞ்ஜிதி பகுதியருகே அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்...

சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு வெளியான முக்கிய தகவல்

குழந்தைகளின் மன வலிமையை மேம்படுத்தும் வகையில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே அனைத்தையும் தாங்கும் குழந்தையாக வளர்ப்பதே இதன்...

சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு வெளியான முக்கிய தகவல்

குழந்தைகளின் மன வலிமையை மேம்படுத்தும் வகையில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே அனைத்தையும் தாங்கும் குழந்தையாக வளர்ப்பதே இதன்...

இணைய வசதிகளை இன்னும் வேகமாக்க ஆஸ்திரேலியா தயார்

மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய...