Newsபெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

-

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து விவாதிக்க பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மாநில முதல்வர்கள் மற்றும் முதலமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இன்று மாநில மற்றும் மத்திய தலைவர்கள் கூடுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வார இறுதியில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதை அடுத்து, இந்தக் கூட்டத்தை நடத்த பிரதமர் முடிவு செய்தார்.

தெற்கு அவுஸ்திரேலியாவில் இரவோடு இரவாக அமுலுக்கு வந்த ஒரு சட்டம் இன்றைய அமைச்சரவை கூட்ட நிகழ்ச்சி நிரலில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடுமையான சட்டங்கள், பெண்களுக்கு அதிக நிதி மற்றும் குழந்தைகள் ஆதரவு சேவைகள் போன்ற பிற விஷயங்களும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நீண்ட காலப் பிரச்சனை என்றும், அணுகுமுறையில் மாற்றம் தேவை என்றும் பிரதமர் சமீபத்தில் கூறினார்.

Latest news

பாசிகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு $100,000 வரை மானியம்

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கடற்கரையோரப் பகுதிகளில் நீடிக்கும் நச்சுப் பாசிப் பூக்களால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு புதிய கட்ட நிதி உதவியை அறிவித்துள்ளது. உள்ளூர் வணிகங்களில் இந்த நச்சுப்...

கைகுலுக்கலுடன் முடிவுக்கு வந்த தாய்லாந்து-கம்போடிய மோதல்

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். ஆசிய பிராந்தியக்...

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...