Newsசுகாதார அமைச்சரின் வருகையின் போது நோயாளிகளாகச் செயற்படும் சுகாதாரப் பணியாளர்கள்

சுகாதார அமைச்சரின் வருகையின் போது நோயாளிகளாகச் செயற்படும் சுகாதாரப் பணியாளர்கள்

-

விக்டோரியாவின் சுகாதார அமைச்சர் மேரி-ஆன் தாமஸின் வருகையின் போது மருத்துவமனை ஊழியர்கள் குழு ஒன்று நோயாளிகள் போல் நடித்ததாக சுகாதாரத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கோலக் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்ற போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மருத்துவ மனை மிகவும் பரபரப்பாக உள்ளதை நம்ப வைக்க இந்த மோசடி செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த தந்திரத்தில் ஈடுபட்ட 10 ஊழியர்களில் ஒருவர் ஆம்புலன்சில் நோயாளியாக வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட வைத்திய நிலையம் தனது சொந்த ஊழியர்களை பயன்படுத்தி மிகவும் பரபரப்பான அவசர சிகிச்சை நிலையமாக காட்டவே இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் வருகைக்குப் பின்னர் நோயாளிகள் பதிவு தரவு அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களின் பெயர்கள் ரத்து செய்யப்பட்டதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

இது உண்மையான நோயாளிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், நோயாளிகளின் கவனிப்பு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணக்கெடுப்பு அறிக்கை காட்டுகிறது.

10 ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் சம்பவத்தின் தீவிரம் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...