Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப் - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப் – IPL 2024

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

சென்னை அணிக்கு ஆரம்ப வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ஓட்டங்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ஓட்டம் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ரவீந்திர ஜடேஜா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில் 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும் இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்...

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...