Sportsஒரு ஓட்டத்தால் வென்றது ஐதராபாத் அணி - IPL 2024

ஒரு ஓட்டத்தால் வென்றது ஐதராபாத் அணி – IPL 2024

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இடம்பெற்ற 50-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அபிஷேக் 12 ஓட்டங்களுடனும் அன்மோல்பிரீத் சிங் 5 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். மெதுவாக விளையாடிய ஹெட் 44 பந்தில் 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளாசன் அவர் பங்குக்கு அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் அதிரடி காட்டிய நிதிஷ் அரை சதம் விளாசி அசத்தினார்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ஓட்டங்களுடனும் கிளாசன் 42 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதன்படி 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...

சாதனை வருவாயை ஈட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்

கடந்த டிசம்பரில் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது...

புதுப்பிக்கப்பட உள்ள Virgin Australia –

Virgin Australiaவில் 25 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு மறுஆய்வு வாரியத்தின் சிறப்பு ஆலோசனையின் பேரில், மத்திய நிதியமைச்சர் ஜிம்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சாதனம்

நேற்று (27) காலை கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சாதனம் ஒன்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரதான...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ந்துள்ள தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள்

ஆஸ்திரேலியாவில் தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள் சுமார் 3.73 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைபெறும்...