Newsகொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு பற்றி மருத்துவ நிபுணர்களின் விசேட அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு பற்றி மருத்துவ நிபுணர்களின் விசேட அறிவிப்பு

-

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என்ற தகவல் பரவியுள்ள நிலையில், பிரபல மருத்துவ நிபுணர்கள் இது பற்றி பயப்படத் தேவையில்லையெனக் கூறியுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த, ‘AstraZeneca’ நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக 51 வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

இதற்கு இந்நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களுடைய கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவாக இரத்தம் உறைதல் அல்லது இரத்த தட்டணுக்கள் குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிறுவனமானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது.

‘Serum India’ நிறுவனமானது AstraZeneca-வுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ‘CoviShield’ என்ற பெயரில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

இது குறித்து, பிரபல தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் ராமன் கங்காகேதார், ‘Vitamin B12’ மருந்து சிலருக்கு பக்கவிளைவை ஏற்படுத்தலாம் என்பதால், வைத்தியசாலையில் வைத்து தான் வழங்கப்பட்டதெனக் கூறினார்.

கொரோனா தடுப்பூசியால், 10 இலட்சம் பேரில் ஏழு அல்லது எட்டு பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

முதல் டோஸ் எடுத்துக்கொண்டபோது, பக்கவிளைவுக்கான சாத்தியம் சற்று அதிகமாக இருக்கலாம். இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு, அதற்கான சாத்தியம் மேலும் குறைகிறது. பூஸ்டர் எனப்படும் மூன்றாவது டோஸ் எடுத்துக்கொண்டால், பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைகிறது.

மேலும் பக்கவிளைவுகள் என்றால் தடுப்பூசி போட்ட பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஏற்படும். அதற்கு மேல் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் மக்கள் பயப்படத் தேவையில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...