இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் திகதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று, வாக்களித்ததற்கு பிறகு வயல்வெளிகளில் சென்றபோது பாம்பு கடிக்கு ஆளாக இருக்கிறார்.
உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த வைத்தியரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள் ஆனால் மருத்துவத்தால் சரி ஆகாது, கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற சிலர் கூற மூடநம்பிக்கையால் கயிறு கட்டி இரண்டு தினங்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியின் போட்டு வைத்துள்ளனர்
ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அவரை அந்த இளைஞரை காப்பாற்றவில்லை மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிர் இருக்கிறதா என கூட சோதிக்காமல் நதியிலேயே போட்டு வைத்துள்ளனர்.
இது குறித்த காணொளி தற்போது சமூகவளைத்தளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது.
நன்றி தமிழன்