Melbourneமெல்போர்னில் திருடச் சென்ற மூன்று அயர்லாந்து பிரஜைகள் கைது

மெல்போர்னில் திருடச் சென்ற மூன்று அயர்லாந்து பிரஜைகள் கைது

-

மெல்போர்னில் 60 திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று ஐரிஷ் பிரஜைகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் மெல்பேர்னில் 60 ஆடம்பர வீடுகளில் திருட்டுச் சம்பவங்களைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய மூன்று ஐரிஷ் பிரஜைகள் 19, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாகவும் அதன் பின்னர் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக Blackburn, Doncaster, Narre Warren, Hampton Park Narre Warren மற்றும் Templestowe ஆகிய பகுதிகளில் இவர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான திருட்டு சம்பவங்கள், குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்து வெளியூர் சென்றிருந்த வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இல்லாத இடங்களை துப்புரவு திரவம் கொண்டு சுத்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவரும் இன்று மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...