ஆசியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த விசா கட்டணம் இலங்கையில் வசூலிக்கப்படுவதாக சுற்றுலாத்துறை தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
விசா கட்டணத்தை உயர்த்தும் இலங்கையின் முடிவு சுற்றுலாத்துறை தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வெளிநாட்டவர்கள் இலங்கையை விட வேறு நாடுகளை தெரிவு செய்யலாம் என பயண நிறுவனங்கள் சந்தேகிக்கின்றன.
இலங்கை அரசாங்கத்தின் வீசா கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் இலங்கை சுற்றுலாத் தலைவர்கள் ஏற்கனவே உரிய திணைக்களங்களுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும், ஆசியக் கண்டத்தில் இலங்கைக்கு அதிக விசா செலவுகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விசா கட்டணத்தை குறைக்குமாறு சுற்றுலாத்துறை தலைவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வ கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு வரும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை எட்டுவதற்கு, விசா கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இல்லை என்றால், குறைந்த கட்டண விசா கட்டணம் உள்ள வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளை சுற்றுலா பயணிகள் இனி தேர்வு செய்வார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.