Cinemaஇயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

-

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிமுக வீடியோ கடந்த மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

கலகலப்பான காட்சிகள் நிறைந்த புதிய திரைப்படத்தின் அறிமுக வீடியோ, அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் இடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய திரைப்படத்தின் தலைப்பு இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்தது.

‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

லவ் டுடே’ திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘லவ் டுடே’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை புதிய படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் இப்படத்தின் தலைப்பினை படக்குழு வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு டிராகன் என பெயரிடப்பட்டுள்ளது.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...