Newsஉக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் -...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

-

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னாள் இராணுவத்தினரை அனுப்பி கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடியான வேலைவாய்ப்பு முகவர்களுடன் இணைந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஓய்வுபெற்ற போர்வீரர்களை ரஷ்ய – உக்ரைன் போர் முனைக்கு அனுப்பும் மோசடி செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

பீட்டர்ஸ்பேர்க் போன்ற புகழ்பெற்ற இடங்களில் காணிகளை வழங்குவதாகவும், ரஷ்யாவின் குடியுரிமை வழங்குவதாகவும், போரில் ஈடுபடும் மக்களுக்கு 10 இலட்சத்திற்கும் அதிகமான தொகை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர்களுக்கு பணமோ, சம்பளமோ வழங்கப்படவில்லை என்றும், உயிரிழப்பு ஏற்பட்டாலோ, பலத்த காயம் ஏற்பட்டாலோ இழப்பீடும் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த மோசடிகளில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் பலர் சிக்கி போர் முனையில் இறங்கியுள்ளதாகவும் அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னாள் இராணுவத்தினர் தொடர்ந்து போருக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல, கூலிப்படையினர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் வெளிவிவகார அமைச்சினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

வார இறுதியில் விக்டோரியாவில் பனிப்புயல் ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஒரு பெரிய பனிப்புயல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய பனிப்புயலாக இது...

ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு

ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஒரு வருடத்தில் அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. ஒரு மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 1.9% இலிருந்து 2.8% ஆக...

கிழக்கு கடற்கரையிலிருந்து ஐரோப்பாவிற்கு விரைவில் விமானங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான Qantas, நிகர லாபத்தில் 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர லாபம் $2.4 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், நிறுவனத்தின் வருவாய்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...