7 நாய்க்குட்டிகளை சாலையில் விட்டுச் சென்ற அடிலெய்டு தம்பதிக்கு $40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
வாகனத்தில் வந்த தம்பதியரால் இந்த 7 நாய்க்குட்டிகளும் வெறிச்சோடிய இடத்தில் கைவிடப்பட்டதாக அடிலெய்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேக நபர்கள் 51 மற்றும் 58 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய விலங்கு சட்டத்தின் கீழ், விலங்குகளை கைவிடுவது விலங்கு நலச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட எவருக்கும் $20,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
விலங்குகள் நலன்புரி சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மிருகங்களை வீதியில் விடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் அடுத்த மாதம் போர்ட் அடிலெய்ட் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
		




