Melbourneமெல்போர்ன் வீட்டில் இருந்து $100,000 மதிப்புள்ள சொத்து திருட்டு

மெல்போர்ன் வீட்டில் இருந்து $100,000 மதிப்புள்ள சொத்து திருட்டு

-

மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள வீட்டில் இருந்து $100,000 மதிப்புள்ள கார் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அண்மையில் இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து கார் உள்ளிட்ட பொருட்களை திருடிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் டோவெட்டனில் உள்ள ஹாக்கி தெருவில் உள்ள வீட்டிற்குள் அந்த நபர் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் இருந்த பணம், நகை, கார் சாவி உள்ளிட்ட பல பொருட்களை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் குற்றவாளி சுமார் 100,000 டொலர் பெறுமதியான காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 5.28 மணியளவில் சந்தேகநபர் பெட்ரோல் திருடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நபர் ஆப்பிரிக்க தோற்றத்தில் கறுப்பு ஆடை அணிந்திருப்பவர் என துப்பறியும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் அல்லது கேமரா காட்சிகள் இருப்பவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...