லத்வியாவின் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாட்வியாவின் அரச எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில், நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தியதற்காக ஐந்து இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பிரஜை ஓட்டிச் சென்ற காரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பயண ஆவணங்கள், விசா, குடியிருப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் பயணிப்பதைக் கண்டனர்.
காரை ஓட்டி அவருக்கு உதவிய இலங்கை பிரஜைகள் இருவரிடமும் விசா உள்ளிட்ட அனுமதிப்பத்திரங்கள் இருந்த போதிலும் அதில் பயணித்த ஏனைய நபர்களிடம் அனுமதிப்பத்திரம் எதுவும் இல்லை.
மேலும், மற்றொரு காரில் பயணித்த மூன்று இலங்கை பிரஜைகளும் அந்த பகுதியில் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் நபர்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லத்வியாவில் சட்டவிரோதமாக குடியேற அனுமதித்த இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இரண்டு முதல் எட்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.