சிட்னியில் பெய்து வரும் கனமழையால் வாரகம்ப அணை இன்று காலை நிரம்பத் தொடங்கியது.
நியூ சவுத் வேல்ஸ் நீர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், இன்று காலை 7.30 மணிக்கு இந்த உபரிநீர் வெளியேறி, நாள் முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளது.
ஹாக்ஸ்பரி மற்றும் நேபியன் ஆறுகள் உட்பட வெள்ளம் ஏற்படக்கூடிய நீர்வழிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலங்களில் மொருயா மற்றும் டியுவா ஆற்றுப் பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், தென் கரையோரமான வம்பானிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கைகளை மக்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் தென் கரையோர மற்றும் இலவர பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிட்னியை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு 30மிமீ மழை பெய்துள்ளதுடன், இன்று மேலும் 20மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு கூடுதலான மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.