தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக சிட்னியின் Warragamba அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், அடுத்த சில மணிநேரங்களில் எப்போது வேண்டுமானாலும் நிரம்பி வழியும் என நியூ சவுத் வேல்ஸ் நீர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அணைக்குக் கீழே உள்ள பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களை கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மற்றும் சிட்னி உட்பட பல பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹாக்ஸ்பரி நேப்பியர், இல்லவர்ரா, தெற்கு கடற்கரை, தெற்கு டேபிள்லேண்ட்ஸ் மற்றும் பனி மலைகள் உள்ளிட்ட மாநிலத்தின் தெற்குப் பகுதிகளுக்கு திடீர் வெள்ள முன்னறிவிப்புகளுடன் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடப்பட்டன.
இன்று காலை 70 தொடக்கம் 90 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், எதிர்வரும் காலங்களில் 100 தொடக்கம் 120 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ள நீரில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அரச அவசர சேவை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், Illawarra மற்றும் Bateman கடற்கரைகளுக்கு பலத்த காற்று மற்றும் ஆபத்தான அலைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் இன்று 25மிமீ முதல் 45மிமீ வரை மழை பெய்யக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.