Newsஉலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

-

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்று காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி யில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி பொதுச்சுடர் முன்னாள் பேராளியும் முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழின் படுகொலை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ் நகரிலிருந்து ஆரம்பமானது இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சின் ,முன்னாள் உப தவிசாளர் விஜயன் , வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணி தலைவி ஜெயரஞ்சி ,சமூக செயற்பாட்டாளர் சபாஷ் ,அம்பிகை பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தொடர்ந்து 13ஆம் திகதி திங்கட் கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும்.

இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Latest news

Medibank வாடிக்கையாளர்கள் பெறும் நம்பமுடியாத நன்மைகள்

இந்த ஆண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு $160 மில்லியனை திருப்பித் தர Medibank நடவடிக்கை எடுத்துள்ளது. இது அதன் Give – Back திட்டத்தின் ஒரு பகுதி என்று...

விக்டோரியாவின் வீட்டுவசதி நெருக்கடியைத் தீர்க்க மேலும் 300,000 வீடுகள்

விக்டோரியன் மாநில அரசு மெல்பேர்ணின் பல பகுதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. டிராம் மற்றும் ரயில் நிலையங்களை உள்ளடக்கும் வகையில் புதிய வீடுகளைக் கட்டுவதில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் பெறும் துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய வேலைச் சந்தையில் மிகப்பெரிய சம்பள உயர்வைப் பதிவு செய்த வேலைத் துறைகள் குறித்த புதிய தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு...

TikTok – Instagram-இல் வரும் சுகாதார வீடியோக்கள் குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

TikTok மற்றும் Instagram போன்ற சமூக ஊடக தளங்களில் ஆர்வலர்கள் வெளியிடும் காணொளிகள் மற்றும் பதிவுகள் மூலம் மருத்துவ பரிசோதனைகள் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுவது...

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...