ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இடம்பெற்ற 64 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற. லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது..
அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் மெக்கர்க் அர்ஷத் கான் பந்துவீச்சில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷாய் ஹோப், போரெல் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். ஹோப் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த போரெல் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் லக்னோ அணியின் பந்துவீச்சை துவசம்சம் செய்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் அரைசதமடித்தார்.இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களை குவித்தது.
அதன்படி 209 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாட கலமிறங்கிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியுள்ளது. அதன்படி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
நன்றி தமிழன்