Brisbaneபிரிஸ்பேன் பள்ளி அருகே பயங்கர கத்திக்குத்து

பிரிஸ்பேன் பள்ளி அருகே பயங்கர கத்திக்குத்து

-

பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள பள்ளி ஒன்றிற்கு அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அகாசியா ரிட்ஜில் உள்ள கிரிகோரி மற்றும் ரொட்சே வீதி சந்திப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுமார் ஒரு வாரத்திற்குள் குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது வாள்வெட்டு சம்பவம் இதுவென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் அகாசியா ரிட்ஜில் உள்ள மோர்டிமர் சாலையில் உள்ள பூங்கா ஒன்றில் 22 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவரின் 30 வயதுடைய நண்பரும் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Latest news

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

200% அதிகரித்துள்ள குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாடு

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது வியத்தகு முறையில் அதிகரித்து, விளையாட்டு, வாசிப்பு, இசை மற்றும் கலை ஆகியவற்றைக் கைவிடுவதற்கு...

மெல்பேர்ண் குழந்தைகள் மையத்தில் தாக்குதல் – தாய் மீது வழக்கு விசாரணை

மெல்பேர்ணில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் தனது ஊனமுற்ற குழந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, ஒரு தாய் குற்றவியல்...