மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் காயமடைந்த அவுஸ்திரேலியருக்கு தூதரக உதவிகளை வழங்கி வருவதாக வெளிவிவகார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலில் மூன்று ஸ்பானியர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
முக்கிய சுற்றுலாப் பகுதியான பாமியான் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
தாலிபான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் மதின் கானியிடம் கூறுகையில், தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.