ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணியின் தலைவர் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் போப் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து பெங்களூரு அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களை சேர்த்த நிலையில், விராட் கோலி 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டு பிளெஸ்சிஸ் உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்திய டு பிளெஸ்சிஸ் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
பின்னர் கை கோர்த்த கேமரூன் கிரீன் – படிதார் இணை சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். படிதார் 23 பந்துகளில் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பொப் டு பிளெஸ்சிஸ் 54 ஓட்டங்கள் குவித்தார். சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 219 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
அதன்படி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிலே ஓப் சுற்றுக்கு முன்னேறியது.