Newsஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

-

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.

விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு அஜர்பைஜான் அருகே உள்ள ஜோல்பா பகுதியில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாயன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி, தப்ரிஸ் மாகாணத்தின் இமாம் முகமது அலி அல் ஹாஷிம் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதேவேளை, ஈரான் அதிபரின் திடீர் மரணத்திற்கு ஹமாஸ் அமைப்பும் இரங்கல் தெரிவித்துள்ளது.

அதிபரின் மரணம் குறித்து ஈரான் மக்களுடன் வருத்தம் மற்றும் வேதனையை பகிர்ந்து கொள்வதாக அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் முழு ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்குப் பின்னர், ஈரான் துணை ஜனாதிபதி மொஹமட் மொக்பர் இடைக்கால அதிபராக வருவார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, இடைக்கால ஜனாதிபதியாக 68 வயதாகும் மொக்பர், சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் மூவரடங்கிய சபையில் அங்கத்தவராக இருப்பார்.

ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் இறந்த 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த செயல்முறை ஈரானிய ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மேற்கொள்ளப்படும் மற்றும் ஈரானில் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் அவர் இறுதி முடிவு எடுக்கிறார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதங்கள் தொடர்ந்து சரிவதற்கான காரணங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையைப் பராமரிக்க போதுமான குழந்தைகள் இல்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2021 க்கு இடையில் 50–54 வயதுடைய குழந்தை இல்லாத பெண்களின்...

புதுமை பெறுகிறது விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை எதிர்த்துப் போராட விக்டோரியா காவல்துறை புதிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளது. விக்டோரியா காவல்துறை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றங்களைச்...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டுகள் – கடுமையாகும் சட்டங்கள்

விக்டோரியாவில் கார் திருட்டு விகிதம் இந்த ஆண்டு 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காப்பீட்டு முகவர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு...

ஆன்லைனில் கசிந்த அல்பானீஸ், டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ், எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஒரு...

மலேசியாவில் குழந்தைகள் மத்தியில் பரவும் நோய்

மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றுநோய் காரணமாக 6000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடந்த வாரத்தில் 97...

விர்ஜின் ஆஸ்திரேலியா பயணிகளுக்கான புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான விர்ஜின் ஆஸ்திரேலியா, பயணிகளுக்கான புதிய சாமான்கள் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, Economy வகுப்பு பயணிகள் அதிக சாமான்களை எடுத்துச் செல்ல முடியும்,...