அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்நிலையில் இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அகியோர் களம் இறங்கினர். இதில் ஹெட் 0 ஓட்டம், அபிஷேக் சர்மா 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ராகுல் திரிபாதி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.
மறுபுறம் களம் இறங்கிய நிதிஷ் ரெட்டி 9 ஓட்டங்கள், ஷபாஸ் அகமது 0 , ஹென்றிச் க்ளாசென் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அப்துல் சமத் களம் புகுந்தார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய திரிபாதி அரைசதம் அடித்த நிலையில் 55 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சன்வீர் சிங் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து அப்துல் சமத் உடன் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இறுதியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ஓட்டங்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 13.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.
அதன்படி 2024 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.