Sportsபெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் - IPL 2024

பெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 17 ஓட்டங்கள், கோலி 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ரீன் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் புகுந்த மேக்ஸ்வெல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக படிதார் உடன் லோம்ரோர் ஜோடி சேர்ந்தார்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய படிதார் 22 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக ஸ்வப்னில் சிங் களம் புகுந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ஓட்டங்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...