அனைத்து உணவு நிவாரணத் தொண்டு நிறுவனங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பசியால் வாடும் ஆஸ்திரேலியர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என புதிய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பெற மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கின்றனர் என்றும் மேலும் சிலர் உணவின்றி பல நாட்கள் அலைவதாகக் கூறப்படுகிறது.
மதிய உணவுக்கு எதுவும் கொடுக்காததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட நாடு அல்லது பஞ்சத்தால் தவிக்கும் நாடு சந்திக்கும் பிரச்னை போன்றே இந்த நிலை இருந்தாலும், ஆஸ்திரேலியாவில்தான் அதிகம் நடப்பதாக புதிய சர்வேயில் தெரியவந்துள்ளது.
உணவு நிவாரணத்திற்கான ஆஸ்திரேலியர்களின் தேவை சாதனை அளவை எட்டியுள்ளது மற்றும் அதை வழங்கும் பணியில் மூன்றில் இரண்டு பங்கு தொண்டு நிறுவனங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய உணவு நிவாரண அமைப்பான ஓஸ் ஹார்வெஸ்ட் நேற்று 1500 தொண்டு நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பை வெளியிட்டது, இது வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் மிகவும் ஆபத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தியது.
ஒவ்வோர் மாதமும் குறைந்தது 30,000 ஆஸ்திரேலியர்கள் உணவு இல்லாமல் தவிப்பதாக Aus Harvest மதிப்பிடுகிறது.
இவ்வாறான நிலை இருந்தும் உதவி கேட்காதவர்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.