பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் 67க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் உள்ள இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக், தாக்கத்தின் அளவு முதலில் நினைத்ததை விட மிக அதிகம் என்றார்.
சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 150க்கும் மேற்பட்ட வீடுகள் ஆறு முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளன.
எங்க மாகாணத்தில் பேரிடர் வலயத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு ஆபத்தானதாகவும் நிலையற்றதாகவும் உள்ளது மற்றும் சுமார் 1,250 உயிர் பிழைத்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் காணாமல் போனவர்களை ஐக்கிய நாடுகள் சபை, அரசாங்க அமைப்புகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இன்னும் தேடி வருகின்றனர்.