விக்டோரியா மாநிலத்தில் மேலும் பல தேசிய பூங்காக்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக ஏராளமான மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கிப்ஸ்லாந்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அதிகமான பூங்காக்களை அமைப்பதன் மூலம் காடுகளுக்குள் நுழைய முடியாமல் போவதாகவும், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் முகாமிடுதல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினர்.
எனினும், இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இது நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
விக்டோரியாவின் சில காடுகளை தேசிய பூங்காக்களாக மாற்றும் முன்மொழிவின் கீழ் மத்திய மலைநாட்டில் தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளுடன் சுமார் 355,000 ஹெக்டேர் சேர்க்கப்படும்.
பல சிறிய தேசிய பூங்காக்களை இணைத்து ஒரு பெரிய தேசிய பூங்காவை உருவாக்குவது திட்டம்.
இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால் இப்பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என இன்றைய பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.