கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், பாலஸ்தீன ஆதரவு முகாம்களில் இருந்து மாணவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளியேற உத்தரவிட்டுள்ளது.
கடுமையான பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த முகாம்களில் இருந்து மாணவர்களை வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பதிவிட்ட போராட்டக்காரர்கள், இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளால் தம்மை வெளியேறுமாறு உத்தரவிட்டு கடிதம் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் முகாமைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு முகாம்களை காலி செய்வதற்கான உத்தரவு என்றும், போராட்டக்காரர்கள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வசதிகள் மற்றும் சேவைகளுக்கான இயக்குனர் ஜெரமி மேத்யூஸ், அப்பகுதியில் தொடர்ந்து முகாம்கள் இருப்பது ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.
அவர்களை அகற்றுவதற்கு அதிகாரம் தனக்கு இருப்பதாகவும், தேவைப்பட்டால் காவல்துறையை அழைப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.