ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தோஹாவில் இருந்து டப்ளின் நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானம் காற்று கொந்தளிப்பில் சிக்கியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கத்தார் ஏர்வேஸ் விமானம் துருக்கிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது காற்றில் ஏற்பட்ட நிலையற்ற நகர்வு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த சுமார் 12 பேரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 6 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்ளடங்குவதாக டப்ளின் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காற்றில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக விபத்துக்குள்ளான போயிங் பி 787-9 விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.