ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியான செனட் அறிக்கைகள், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் காட்டுகின்றன.
இந்நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் கல்வித்துறையை மேம்படுத்தும் தேசிய செயற்திட்டமொன்றை தயாரிப்பதில் கல்வி அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கல்வி அமைப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படைக் கல்வியை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்நாட்டின் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுவதுடன், கல்வி முறையை கைவிடும் பிள்ளைகளுக்கு மாற்றுக் கல்விச் சூழலை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.