வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் குத்தகைதாரர்கள் மோசடிக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக வீட்டு வாடகையை குறித்த திகதியில் செலுத்திய போதும் வீட்டு உரிமையாளர்களின் சில மோசடி நடவடிக்கைகளினால் குத்தகைதாரர்கள் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குத்தகைதாரர்கள் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
செல்லப் பிராணிகளை வளர்க்கக் கூடாது, சமைக்கும் போது உணவின் வாசனை வீட்டில் இருந்து வெளியேறக் கூடாது, குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என பல கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் வாழவேண்டியது குத்தகைதாரர்களுக்கு மிகவும் கடுமையான சூழ்நிலை மற்றும் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குத்தகைதாரர்கள் தாங்கள் அனுபவிக்கும் சிரமங்களை சமூக ஊடகங்கள் மூலம் பதிவு செய்திருந்ததுடன், கடந்த 12 மாதங்களில் வாடகைச் செலவு 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.