2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவில் சாலை மரணங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துகளைக் குறைக்க நிபுணர்களின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா ஆட்டோ மொபில் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிராட்லி கூறுகிறார்.
சாலை விபத்துகளில் கவனம் செலுத்தும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பொது சுகாதார பேராசிரியர் மார்க் ஸ்டீபன்சன், அதிக எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு வேகமே காரணம் என்று கூறினார்.
இது தொடர்பாக சுமார் ஆயிரம் சாரதிகளின் தரவுகள் பெறப்பட்டு வேகத்தை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினாலும் அது நடக்கவில்லை என தெரியவந்துள்ளது.
சாரதிகளின் சோர்வு, அதீத வேகம், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பல வீதி விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காரணங்களைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இலக்குகளை எட்ட முடியும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.