பல்லாரட் பகுதியில் இருந்து காணாமல் போன சமந்தா மர்பியை தேடும் பணியில் இன்று தொடங்கியுள்ள நிலையில், பல்லாரட் நகருக்கு அருகே உள்ள அணைக்கட்டு அருகே டெலிபோன் என சந்தேகிக்கப்படும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது.
51 வயதான பெண் கடைசியாக பெப்ரவரி 4 ஆம் திகதி காலை உடற்பயிற்சிக்காக பல்லாரத்தில் உள்ள யுரேகா தெருவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
காணாமல் போன பெண்ணை தேடும் பணி இரண்டு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டதுடன், இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் போது இந்த பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
விசாரணை முடியும் வரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேடுதல் பணியில் ஈடுபட வேண்டாம் என விக்டோரியா காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பெண் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.