Newsபல கோடி மக்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட “All eyes on...

பல கோடி மக்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட “All eyes on Rafah” புகைப்படம்

-

AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” என்ற காசா ஆதரவு வாசகம் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

2023 ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,171 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளதுடன் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, மத்திய காசாவில் தனது தாக்குதலை முழு வீச்சில் நடத்திய இஸ்ரேல் இப்போது தெற்கு காசாவைக் குறிவைத்துள்ளது. தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” புகைப்படமும் வேகமாகப் பரவியது. இஸ்டாகிராமில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன. பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பாலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் படம் அமைந்தது.

இந்தப் படத்தை பாலஸ்தீன பின்புலம் கொண்ட அமெரிக்க நடிகர் பெட்ரோ பாஸ்கல், மாடல்கள் பெல்லா, கிகி ஹாடிட், பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர் ஓஸ்மானே டெம்பேல் ஆகியோர் தங்கள் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். ட்விட்டரில் இந்த் ஹேஷ்டேக் 2.75 கோடி முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தரப்போ ஹமாஸ் அமைப்பின் மிக முக்கியப் புள்ளிகளான இருவரைக் கொலை செய்யவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். அந்த இலக்கை எட்டியதாகவும் தெரிவித்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் திறந்தவெளியில் தீ வைக்க தடை

விக்டோரியா மாநிலத்தின் ஐந்து பகுதிகளில் இன்று திறந்தவெளியில் தீ வைப்பதற்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று 40 டிகிரி செல்சியஸுக்கு மேல்...

ஆஸ்திரேலியாவில் மூடும் அபாயத்தில் உள்ள பிரபல Fashion Brand

ஆஸ்திரேலியாவில் பிரபல Fashion பிராண்டான Rivers, நஷ்டத்தால் சரியத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள 130க்கும் மேற்பட்ட Rivers கடைகள் மூடப்பட்டு சுமார் 650 பேர்...

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க எலோன் மஸ்க் முயற்சி

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் முயற்சித்துள்ளார். மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம் டோனல்சன் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர்...

வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 25ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில்...

கிறீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடும் ட்ரம்ப்

கிறீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென். டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும்...

தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்த பிரபல இசை அமைப்பாளர்

பிரபல இசை அமைப்பாளர் டி. இமான் கடந்த 24ம் திகதி தனது 42ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, தனது...