பிரம்மாண்ட பலூன்கள் மூலம் தென் கொரியாவுக்குள் வட கொரியா குப்பைகளைக் கொட்டியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது 2ஆவது உளவு செயற்கைக்கோளை வட கொரியா திங்கட்கிழமை விண்ணில் செலுத்த முயன்றது. எனினும், அதை ஏந்திச் சென்ற ரொக்கெட் சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.
இந்நிலையில், நூற்றுக்கணக்கான பலூன்களில் குப்பைகளைக் கட்டி அவற்றை தென் கொரியாவுக்குள் வட கொரியா புதன்கிழமை பறக்கவிட்டது. அவற்றில் வெடிபொருள்களோ, இரசாயன ஆயுதங்களோ இருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் தென்கொரியா மீட்புக் குழுவினரை அனுப்பியது.
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன்னர் தென்கொரியா நடத்திய போர் விமானப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா இந்த விநோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.