Cinemaமகளை பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை - இளையராஜா

மகளை பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை – இளையராஜா

-

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம்தான் அன்னக்கிளி. இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.

இவர் 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

“பிறந்தநாள் வாழ்த்துகளை நீங்கள்தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத்தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; எனக்கு அது இல்லை. நன்றி… வணக்கம்” என்று உருக்கமாக கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு

சீனாவின் மலைப்பகுதியான திபெத் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் 130...

2025-இல் முக்கிய வங்கிகளின் பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் 2025 ஆம் ஆண்டிற்கான பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்த தங்கள் கணிப்புகளை வழங்கியுள்ளன. NAB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ...

Dandenong-இல் கண்டெடுக்கப்பட்ட இனந்தெரியாத ஒருவரின் சடலம்

நேற்று காலை 9.40 மணியளவில் அவசர சேவைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி,Dandenong-ல் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Dandenongல் உள்ள McCrae St.-...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...

இளைஞர்கள் அதிகமுள்ள நகரம் எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் அதிக இளைஞர்கள் வசிக்கும் தலைநகரமாக டார்வின் காணப்படுகின்றது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின் தரவுகளின்படி, 35 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டார்வின்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...