உலகின் முன்னணி ஊடக உரிமையாளர்களில் ஒருவரான ரூபர்ட் முர்டோக் ஐந்தாவது திருமணம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
93 வயதான முர்டோக் தனது புதிய மனைவியான 67 வயதான ரஷ்ய உயிரியலாளர் எலினா ஜுகோவாவுடன் கலிபோர்னியாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆறு பிள்ளைகளின் தந்தையான ஆஸ்திரேலியாவில் பிறந்த ரூபர்ட் முர்டோக், ஃபாக்ஸ் நியூஸ், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி சன் மற்றும் தி டைம்ஸ் ஆகிய ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தமான நியூஸ் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவர் ஆவார்.
எலெனா ஜுகோவா ரஷ்ய அமெரிக்க கலை சேகரிப்பாளரான தாஷா ஜுகோவாவின் தாய்.
ரூபர்ட் முர்டோக் பல தசாப்தங்களாக ஃபாக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் நியூஸ் கார்ப்பரேஷன், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், நியூயார்க் போஸ்ட் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஆகிய இரண்டு ஊடக நிறுவனங்களுக்கு தலைமை தாங்கினார்.
ப்ளூம்பெர்க்கின் பில்லியனர் குறியீட்டின்படி $9.77 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்ட ரூபர்ட் முர்டோக், நவம்பர் 2023 இல் இரு நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், மகன் லாச்லன் கீத் முர்டோக்கிற்கு ஆட்சியை வழங்குவதாகவும் அறிவித்தார்.
நியூயார்க் டைம்ஸின் அறிக்கைகளின்படி, கோடீஸ்வரர் ஜுகோவாவுடன் உறவைத் தொடங்கிய பின்னர் மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தத்தை அறிவித்தார்.
அவர் முன்பு முன்னாள் சூப்பர்மாடல் ஜெரி ஹால் என்பவரை திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த ஜோடி 2022 இல் விவாகரத்து பெற்றது.