Newsஇன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

-

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘Limit Interactions’ என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது Insta பயனர்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை பார்ப்போம்.

Meta நிறுவனத்தின் Photo மற்றும் Video sharing சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் Meta (அப்போது Facebook) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் மேலான active பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல்.

Story முதல் Post வரை அனைத்தையும் இதில் பதிவு செய்யலாம். அனைத்தும் காட்சி வடிவிலான மொழியில் இருக்கும். இன்றைய இளைஞர்கள் அதிகம் உலா வருவது இன்ஸ்டாவில் தான். அதை கருத்தில் கொண்டு பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் Limit Interactions என்ற அம்சத்தை மெட்டா வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் Troll மற்றும் Bullying போன்றவற்றை பயனர்கள் எதிர்கொள்வதை தடுக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பயனார்களிடத்தில் இருந்து வரும் DM (Direct Message), போஸ்டுக்கான Comments, Tags போன்ற அனுமதிகள் இருக்காது. இதை தற்காலிகமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். அதாவது ஒருநாள் முதல் நான்கு வார காலம் வரையில்.

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது நெருங்கிய நட்புகளுடன் மட்டும் Interact செய்யலாம். மற்ற பயனார்களிடத்தில் இருந்து message, comment, tag போன்றவற்றை பெறாமல் இருக்கலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தின் Settings and Activity-க்கு சென்று Limit Interactions தேர்வு செய்தால் இந்த அம்சத்தின் பயன்பாட்டை பெற முடியும்.

Latest news

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான சிறந்த விசா வகை எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான விசா வகை Visitor Visa (Subclass 600) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Visitor Visa (Subclass...

NSW ஓட்டுனர்கள் பற்றி வெளியான அதிர்ச்சியான தகவல்

NSW ஓட்டுனர்களில் 10 பேரில் ஒருவர் போதைப்பொருளின் தாக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் நடத்தப்பட்ட சீரற்ற சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Driving High...

கோடை காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் கோடை விடுமுறையின் போது மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை மலைப் பைக் விபத்துக்களினால் 14...

உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலக புள்ளியியல் இணையதளம் குறிப்பிடும் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது. அந்த தரவரிசையின்படி ஆஸ்திரேலியா 19வது இடத்தை பிடித்துள்ளது. 160 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த...

கல்விக்கு சிறந்த நகரங்களின் பட்டியலில் மெல்பேர்ண்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் 2024 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த கல்வி நகரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. (QS Best Student Cities 2024) இது சிறந்த பல்கலைக்கழக இணையதளத்தால்...

கோடை காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் கோடை விடுமுறையின் போது மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை மலைப் பைக் விபத்துக்களினால் 14...