Newsநிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சீனாவின் விண்கலம்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சீனாவின் விண்கலம்

-

நிலவில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வருவதற்காக அனுப்பப்பட்ட சீன விண்கலம், நிலவின் தென்துருவத்தில் நேற்று (02) அதிகாலை தரையிறங்கியது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள், நிலவில் தங்கள் விண்கலங்களை தரையிறக்கி ஆராய்ச்சிகளை தொடர்கின்றன. அந்த வரிசையில், சீனாவின் சாங், விண்கலம் ஐந்து முறை நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020ல் அனுப்பப்பட்ட சாங், – 5 விண்கலம், நிலவில் தரையிறங்கி மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வந்தது. இந்த முறை, நிலவின் தென்துருவத்தில் உள்ள கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வர, சாங், – 6 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

இது, சீன நேரப்படி நேற்று அதிகாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

விண்கலத்தில் தரையிறங்கிய லேண்டர் கருவி, தென்துருவத்தின் மேற்பரப்பு மற்றும் பூமியின் அடிப்பகுதியில் இருந்து, 2 கிலோ அளவுக்கு மண் மற்றும் கற்கள் மாதிரிகளை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு அந்த விண்கலம் வரும் 25ஆம் திகதி பூமிக்கு திரும்ப உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, 2030இல் நிலவில் மனிதர்களை தரையிறங்கச் செய்யும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...