Newsமோடியின் முன் உள்ள சவால்!

மோடியின் முன் உள்ள சவால்!

-

2024 இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

கடந்த முறை 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்த முறையும் பாஜக தனித்து 300+ இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெறும் என்று பெரும்பாலான வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

ஆனால், தற்போது பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்துதான் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த முறை பாஜக கூட்டணி 292 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும் பிற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தனித்து 99 தொகுதிகளை வென்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதனால் கடந்த முறை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையே பெற முடியாத காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் தன்னுடைய பலத்தைக் காட்டியிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியதும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி அதை பெற்றிருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியும் இன்னும் 40 தொகுதிகள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம்.

இதுவே மத்தியில் ஆட்சி அமைப்பதில் பாஜக கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை ஆகிய கட்சிகள் மத்தியில் ஆட்சி அதிகாரம் யாருக்கு என்ற முடிவை கையில் வைத்திருக்கின்றன.

பிகாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி பாஜகவில் முதலில் கூட்டணியில் இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.

தற்போது 2024 தேர்தலில் பாஜகவுக்கு சரிவை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதீஷ் குமார். பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை கூட்டியதே பிகார் முதல்வர் நிதீஷ் குமார்தான்.

தற்போதைய இந்தியா கூட்டணி உருவானதற்கு அடித்தளமிட்டவர் எனலாம்.

ஆனால் சில கருத்து வேறுபாடுகளும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பிலும் தேர்தலுக்கு முன்னதாகவே, இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொண்டார். தற்போது பிகாரில் 12 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அதுபோல ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சிவசேனை கட்சியிலிருந்து பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை என இந்த கட்சிகளை இந்தியா கூட்டணி தங்கள் பக்கம் எடுக்க முயற்சி செய்து வருகிறது.

இதனால் இந்த கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் மத்தியில் இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படும்.

பாஜக தரப்பில் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் இந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

காங்கிரஸ் vs பாஜக

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி கூட்டணி 235 தொகுதிகளில் வென்றுள்ளது. ஜனநாயகத்தை முன்வைத்து பிரசாரம் செய்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசாருக்கு இது வெற்றிதான்.

எனவே, மக்களின் மனமாற்றத்தை எதிரொலிக்கும் இந்த தேர்தல் முடிவுகளை வைத்தும் மேற்குறிப்பிட்ட இந்த கூட்டணி கட்சிகள் முடிவெடுக்கலாம் என்பதால் அது இந்தியா கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு.

ஒருவேளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால்கூட வரும் நாட்களில் பாஜக அரசு அஞ்சியே இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. இந்தக் கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து பின்வாங்கும்பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வது என்பது மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும்.

1998 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சி அமைத்து பின்னர் 1999 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்தது. அப்போதைய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

Boxing Day தினத்தில் ஆஸ்திரேலிய செலவினம் பற்றிய கணிப்பு

இந்த ஆண்டு குத்துச்சண்டை தினத்தில் ஆஸ்திரேலியர்களின் செலவுகள் சாதனை அளவில் அதிகரிக்கும் என்று புதிய தரவு அறிக்கைகள் காட்டுகின்றன. அந்த நாளில் மட்டும் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட $1.3...

விக்டோரியாவில் நாளை BBQ இற்கு தடை

Boxing day தினத்தன்று விக்டோரியாவில் வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விக்டோரியாவின் CFA Boxing day தினத்திற்கு மாநிலம்...

கிறிஸ்மஸ் பரிசுகளை விற்று பணம் சம்பாதிக்கும் ஆஸ்திரேலியர்கள்

இந்த பண்டிகைக் காலத்தில் ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேவையற்ற பரிசுகளை விற்று கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் சம்பாதிக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 52 சதவீத ஆஸ்திரேலியர்கள்...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...

12 மாதங்களுக்கு $1700 அதிகமாக செலுத்தும் மெல்போர்ன் குடியிருப்பாளர்கள்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆண்டு வாடகை $3600 ஆக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. SQM ஆராய்ச்சி அறிக்கைகளின்படி வாராந்திர வாடகை...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...