இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு அவசியமான 272 இடங்களுக்கு மேல் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இன்று காலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளின்படி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 286 இடங்களில் வெற்றி பெற்றது.
அதன்படி, நரேந்திர மோடி 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் உள்ள 543 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது.