இந்த ஆண்டில், மெல்போர்னில் நடந்த சாலை விபத்துகளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
விக்டோரியா காவல்துறையின் போக்குவரத்து தரவுகளின்படி, ஜூன் 6 ஆம் தேதி நிலவரப்படி, விக்டோரியா மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆகும்.
உயிரிழந்தவர்களில் 36 பேர் பெண்கள் எனவும் 84 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விபத்தில் சிக்கிய வாகன ஓட்டுநர்கள் என்பதும், இவ்வாறு உயிரிழந்த ஓட்டுநர்களின் எண்ணிக்கை 55 ஆகும்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகவும், விபத்துகளில் உயிரிழந்த பாதசாரிகளின் எண்ணிக்கை 17 ஆகவும் பதிவாகியுள்ளது.
பெரும்பாலான வீதி விபத்துக்களுக்கு சாரதிகளே பொறுப்பேற்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வாகனம் செலுத்தும் போது பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் வாகனம் செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் மேலும் கேட்டுக்கொள்கின்றனர்.