Newsமூன்றாவது முறையாக பாரதப் பிரதமரானார் மோடி

மூன்றாவது முறையாக பாரதப் பிரதமரானார் மோடி

-

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் ஞாயிற்றுக்கிழமை (09) பதவியேற்றுக் கொண்டார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி முகம்மது முயிஸ{, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமது அபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும், விழாவில் இந்தியா முழுவதும் இருந்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் உட்பட 8,000இற்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் டில்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நன்றி தமிழன்

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...