Melbourneமெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

மெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

-

மெல்போர்னின் தென்கிழக்கே பிரபலமான சுற்றுலா கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக தன்னை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விக்டோரியா காவல்துறை கைது செய்துள்ளது.

சந்தேக நபர் ஒரு பெண் மற்றும் 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4.15 மணியளவில் பிரைட்டன் கடற்கரையில் இந்த பெண் தனது இரண்டு மகள்களுடன் இருந்த போது இந்த ஆபாச செயலுக்கு முகம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் குறித்த பெண் மற்றும் சிறுமிகள் முன்னிலையில் இரண்டு தடவைகள் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு அருகில் உள்ள முட்புதரில் ஒளிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முட்புதரில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததாக விக்டோரியா பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹம்ப்டன் பூங்காவில் வசிக்கும் 51 வயதுடைய நபர், இதற்கு முன்னரும் இவ்வாறான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர் இன்று முராபின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...