மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் விமானத்தில் பயணித்த 9 பேர் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளில் யாரும் உயிருடன் காணப்படவில்லை என்று ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் ஒன்பது பேர் நாட்டின் வடக்கு பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது, விமானம் ராடார் அமைப்பில் இருந்து காணாமல் போனது.
இராணுவ விமானமான இந்த விமானம் மோசமான வானிலைக்கு மத்தியில் பயணித்ததால் இந்த நிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜனாதிபதி சக்வேரா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மலாவி பாதுகாப்புப் படைத் தளபதியினால் தமக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.