இந்த வார இறுதியில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் 250 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், தொடர் மழை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
சிட்னியின் தெற்குப் பகுதிகளில் நாளை 60 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று (12) முதல் மீண்டும் மழை பெய்யும் எனவும், இன்று இரவு மாநிலத்தின் சில பகுதிகளில் 140 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கைகளை மக்கள் தவறாமல் கவனித்து, வெள்ள அபாயத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மூத்த வானிலை ஆய்வாளர் ஆங்கஸ் ஹைன்ஸ் கூறினார்.