மெல்போர்ன் அருகே உள்ள பிரபல உடற்கட்டமைப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடற்கட்டமைப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அதிகாலை 5 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இது சந்தேகத்திற்கிடமான தீயாக கருதப்படுவதாகவும் விக்டோரியா மாகாண தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
நைட்ரோ ஜிம் என அழைக்கப்படும் இந்த உடற்கட்டமைப்பு மையம் தீ விபத்தில் பலத்த சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.